1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. bjp kiran kumar reddy may be appointed as tn governor

தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக கிரண் குமார் ரெட்டி?!.. விரைவில் அறிவிப்பு!...

kiran kumar
தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி. கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி மேற்குவங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பின் தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. அதேநேரம், கேரளா மாநிலத்தின் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இவர்தான் முதலமைச்சர் விஜய்க்கும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில்தான் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் உருவமான கிரண் குமார் ரெட்டி தமிழகத்தில் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியிருக்கிறது..

பிரதமர் மோடி மோடி தற்போது உஸ்பகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர் இந்தியா திரும்பிய பின் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மேலும், தமிழ்நாடு மட்டுமில்லாமல் வேறு சில மாநிலங்களுக்கும் ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மரத்தில் கட்டி வைத்து தீ வைத்த கொடூரம்.. 2 மாதங்கள் உயிருக்கு போராடிய 28 வயது பெண் மரணம்..