வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 13 டிசம்பர் 2017 (16:57 IST)

ஆர்கே நகரில் பாஜக வேட்பாளருக்கு வந்த சோதனை: வீடியோ இணைப்பு!

ஆர்கே நகரில் பாஜக வேட்பாளருக்கு வந்த சோதனை: வீடியோ இணைப்பு!

ஆர்கே நகரில் இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த தேர்தல் தற்போது நடக்க உள்ளது. இதில் வெற்றிபெற வேண்டும் என அனைத்து கட்சியினரும் முனைப்புடன் களமிறங்கியுள்ளனர்.

 
அதிமுக சார்பில் மதுசூதனன், தினகரன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன் ஆகியோர் களம் இறகியுள்ளனர். இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் மாறி மாறி வேட்பாளர்கள் முன்னிலையை காட்டுகிறது.
 
இந்நிலையில் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்று ஆர்கே நகரில் மக்களிடம் நேரடியாக உரையாடியது. அதில் அந்த தொகுதி வாசியிடம் தினகரனின் சின்னம் பற்றி கேட்கும் போது குக்கர் என அழகாக பதில் சொல்கிறார். ஆனால் பாஜக எந்த சின்னத்தில் போட்டியிடுகிறது என்று கேட்டால் அதுபற்றியெல்லாம் எங்களுக்கு தெரியாது என கூறுகிறார்.
 
நேற்று வந்த குக்கர் சின்னம் தெரிகிறது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் தாமரை சின்னம் தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வலம் வருகிறது.