1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 டிசம்பர் 2017 (13:02 IST)

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வில் ஊழல்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர்களுக்கான தேர்வில், தேர்ச்சி பெற்ற 220-க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண் சான்றிதழில் முறைகேடுகள் நடந்து இருப்பது அம்பலமாகி உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில்  விரிவுரையாளர்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. 1058 பணியிடங்களுக்குக்காக 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வின் முடிவுகள் நவம்பர் 7ம் தேதி வெளியானது. இதில் தேர்வானவர்கள் சான்றிதழ் பரிசீலனைக்கு வருமாறு அழைக்கப்பட்டனர். 
 
இதில் 220 க்கும் மேற்பட்டோரின் சான்றிதழ்களின் மீது சந்தேகப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர். விசாரணையின் முடிவில், நுழைவு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் திட்டமிட்டு திருத்தப்பட்டிருப்பது  உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த கோல்மால் வேலையை செய்வதற்கு, 220 பேரிடம் தலா 25 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றிருப்பது உறுதியாகி உள்ளது.
 
இந்த முறைகேட்டில் நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக ஈடுபட்டிருப்பதாக  தெரியவந்துள்ளது. இதில் ஈடுபட்டுவர்கள் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.