வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (22:52 IST)

கரூரில் பாஜக சமத்துவ கிறிஸ்துமஸ் விழா...

karur
கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் லூர்து சாவியோ அவர்கள் தலைமையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் திரு ஆறுமுகம், கரூர் தெற்கு மாநகரத் தலைவர் திரு ரவி மற்றும் பாஸ்டர் ஆல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி தலைவர் திருமதி தனலட்சுமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் திருமதி உமாதேவி, மாவட்ட தொழில் பிரிவு தலைவர் திரு வெங்கடாசலம், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் திரு பழனிச்சாமி, தமிழ் வளர்ச்சி பிரிவு சந்திரசேகரன் மற்றும் பல்வேறு சர்ச்சுகளைச் சேர்ந்த பாதிரியார்கள் மற்றும் சபை உறுப்பினர்கள், பாஜக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.