திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (23:10 IST)

கரூரில் மீண்டும் இரண்டு கல்குவாரிகள் அமைய எதிர்ப்பு!

karur
கரூரில் மீண்டும் இரண்டு கல்குவாரிகள் அமைய எதிர்ப்பு – ஜல்ஜீவன் திட்டத்தில் 7.50 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் 80 மீட்டர் தூரத்திற்குள் உள்ளது – லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவத்தில் இந்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் புதிய கல்குவாரி எதற்கு ? கருப்பு பட்டியலில் கல்குவாரிகளை சேர்க்க வேண்டும் – சுற்றுச்சூழல் நல ஆர்வலர் முகிலன் அதிரடி பேட்டி.  
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புகளூர் வட்டம், குப்பம் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் சாதாரண கல் மற்றும் சரளை சுரங்க திட்டங்கள் இரண்டு இடங்களில் அமைக்கும் பணியையடுத்து, க.பரமத்தி அருகே உள்ள குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், இங்கு குவாரிகள் அமைக்கப்பட்டால் வேலை வாய்ப்பு பெருகும் என்றும், ஒரு சில இளைஞர்கள் கருத்து கூற, அதே பகுதியில் உள்ள பல பட்டதாரி இளைஞர்கள் எங்களுடைய விவசாயம் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே இங்கு இந்த குவாரிகள் மட்டுமல்ல, புதிதாக அமைக்கப்படும் எந்த குவாரிகளும் அமைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர். சுற்றுச்சூழல் நல ஆர்வலர் முகிலன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஏற்கனவே இந்த குவாரி லைசன்ஸ் முடிந்து மற்றொரு லைசன்ஸ் மூலமாக உள்ளே வர உள்ளதாகவும், தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் அவர்களின் விதிகளின் படி 500 மீட்டர் தூரத்தில் குடிநீரேற்று நிலையம் அமைக்கப்பட்ட நிலையில், 5 ஹெக்டர் பரப்பளவில் குவாரி அமைக்க துடிப்பது ஏன் ? என்றும் வினா எழுப்பினார்.

இதனை தொடர்ந்து அரசு விதிப்படி கரூர் மாவட்டத்தில் எந்த ஒரு குவாரிகளும் செயல்படுவதில்லை என்றும், லைசன்ஸ் முடிந்த குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதனால் அரசிற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு விடுத்தார். இதனை தொடர்ந்து பேசியவர்கள். ஏற்கனவே இதே கல்குவாரியினால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாகவும், ஒருவருக்கு கை இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்பு வருகின்றது என்பது வருத்தத்திற்குரியது, ஏனென்றால், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்றால் கூட தான் வேலை வாய்ப்பு வருகின்றது. ஆனால் அதை நாம் செய்து விடலாமா ? நம் வருங்கால சந்ததியினரின் நிலைமையை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும், ஒரு வீட்டில் நாள்தோறும் எத்தனை முறை இந்த கல்குவாரியினால் பாதிக்கப்பட்டு வருகின்றன என்றும் வினாக்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து அதே பகுதியில் வசிக்கும் கேசவன் என்கின்ற பொறியாளர் பட்டதாரி இளைஞர், ஒவ்வொன்றினையும் புட்டு புட்டு வைத்தது போல, பாறைகளில் தேங்கும் நீரினை வெளியேற்றி திரும்பவும் குவாரிகளை சுரண்டுகின்றனர்.

ஏற்கனவே, இந்த குவாரி லைசன்ஸ் முடிந்து இயங்கி வருவதை ஆதரப்பூர்வமாக அரசிற்கு எடுத்துக்கூறியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என்றும், இதற்கு ஒரு அரசு இன்ஜினியர் ஒருவர் கூட கல்குவாரி வைக்க அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் நானும் ஒரு இன்ஜினியர் தான், ஊரில் எவ்வளவு புகை மற்றும் தூசிகள் விழுந்து வருகின்றன. எனது கோரிக்கை தான் இன்றுவரை கூறி வருவதாகவும், இனிமேல் நீதிமன்றத்தினை நாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏராளமான பொதுமக்களின் பாராட்டுகளை பெற்ற அவரது பேச்சு பெரும் எழுச்சியை உருவாக்கியது. மேலும், இந்த கருத்து கேட்பு கூட்ட நிகழ்ச்சியில்., சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தின் நிர்வாகி ந.சண்முகம், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகி விஜயன், சமூக நல ஆர்வலர் சண்முகம், சமூக செயற்பட்டாளர் மோகன்ராஜ், அதே பகுதியை சார்ந்த பொறியாளர் பட்டதாரி கேசவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அந்த பகுதியில் மட்டுமல்ல, அரசின் விதிகளை மீறும் எந்த குவாரிகளையும் அரசு அனுமதிக்க கூடாது என்றும் விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் இறுதியாக, கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், இந்த கோரிக்கைகள் அனைத்தையும் அரசிற்கு அனுப்பப்படும் என்றும் ஆகவே இது குறித்த வீடியோ ஒளிப்பதிவு எப்போது வேண்டுமானாலும் சமூக நல ஆர்வலர்களும், பொதுமக்களும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறி நிகழ்ச்சியினை முடிவு செய்தார்
 
பேட்டி : முகிலன் – சுற்றுச்சூழல் நல ஆர்வலர் - கரூர்