1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: சனி, 10 டிசம்பர் 2022 (22:21 IST)

ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கொட்டும் மழையிலும் ஆர்பாட்டம்

karur
கரூரில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கொட்டும் மழையிலும் ஆர்பாட்டம் – தேசிய கல்வி கொள்கை 2020 ஐ திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.
 
கரூர் தலைமை தபால்நிலையம் எதிரே, இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தேசிய கல்வி கொள்கை 2020 ஐ திரும்ப பெற கோரி, கொட்டும் மழையிலும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் நடைபெற்ற இந்த ஆசிரியர்கள் ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் என்று ஏராளமான சங்கத்தினை சார்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  இந்த ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமை ஏற்று பேசிய போது கடந்த சட்டமன்ற தேர்தலின் போது., பழைய ஒய்வூதியத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவோம் என்று திமுக அரசு சொன்னது. ஆனால் இன்றுவரை நிறைவேற்றவில்லை, ஆகவே உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே அவரது தந்தை முன்னாள் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 2006 ம் ஆண்டு எதிர்கட்சித்தலைவராக இருந்த போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொகுப்பாசிரியர்களாகவும், கொத்தடிமையாக இருந்த ஆசிரியர் சமுதாயத்திற்கு உடனடியாக தொகுப்பூதியத்தினை ரத்து செய்து காலமுறை ஊதியத்தினை நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்து, பின்னர் ஆட்சிக்கு வந்த உடனேயே  முதல்வர் கலைஞர் கருணாநிதி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை ஆட்சிக்கு வந்த 2 மாதங்களில் செய்து முடித்தார் என்றும் ஆனால், இன்னும் அவரது மகன் மு.க.ஸ்டாலின் இன்றுவரை அவர் கொடுத்த வாக்குறுதியான பழைய ஓய்வுதீய முறையை கொண்டுவர முயற்சிக்க வில்லை என்றும் ஆகவே இந்த வேண்டுகோளை ஆசிரியர் சமுதாயத்தினர் கேட்டுக் கொள்வதாகவும் கேட்டுக் கொண்டார்.