வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (11:58 IST)

மு.க.ஸ்டாலினின் துபாய் உடை குறித்து வதந்தி! – பாஜக நிர்வாகி கைது!

துபாய் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அணிந்திருந்த உடை குறித்து வதந்தி பரப்பிய பாஜக பிரமுகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாட்கள் பயணமாக துபாய் சென்று இன்று திரும்பினார். துபாய் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்பு, சிவப்பில் அணிந்திருந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அணிந்திருந்த அந்த உடை ரூ.17 கோடி ரூபாய் மதிப்புடையது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாக போலி தகவல் ஒன்றை எடப்பாடி ஒன்றிய பாஜக நிர்வாகி அருள் பிரசாத் என்பவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அருள் பிரசாத் போலியான தகவலை பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.