வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (19:29 IST)

பெரியார் சிலையை உடைக்க வேண்டும்: வாட்ஸ் பதிவிட்ட பாஜக நிர்வாகி கைது!

periyar
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் பதிவு செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழகத்தை பொருத்தவரை பெரியாரை ஆதரிக்கும் ஒரு குழுவினரும் பெரியாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு குழுவினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என வாட்ஸ்அப் வழியே தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகி கிருஷ்ணன் என்பவர் வாட்ஸ்அப் வழியே பதிவு செய்துள்ளார் 
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி கிருஷ்ணன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என பாஜக நிர்வாகி ஒருவர் வாட்ஸ் அப்பில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.