திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (19:45 IST)

2024 பாராளுமன்ற தேர்தல் பாஜக பிரதமர் வேட்பாளர் இவர்தான் - அமித்ஷா

amith sha
பிரதமர்  மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தற்போது மழைக்கால பாராளுமன்றக் கூட்டத்தொடரில்  குரல் கொடுத்து வருகிறது.

இந்த  நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என மத்திய உள்துறை அமைச்சரும் முன்னாள் பாஜக தலைவருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பாஜகவில் 70 வயதிற்கு மேற்பட்ட தலைவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவதில்லை என தகவல் வெளியான நிலையில், பிரதமர் மோடிக்கு தற்போது 71 வயதாகிறது. அவரே வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கட்சியினர் வரவேற்றுள்ளர்.