புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 2 டிசம்பர் 2019 (16:19 IST)

அடக்கி ஓரம் கட்டிய பாஜக! சொந்த செலவில் சூனியம் என ஆகிய அரசகுமார் நிலை...

பாஜக கட்சி சார்பில் பி.டி.அரசகுமார் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 
புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக பிரமுகர் ஒருவர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசக்குமார் எம்.ஜி.ஆருக்கு பிறகு நான் ரசிக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகி இருக்க முடியும். காலம் வரும்போது கட்டாயமாக ஸ்டாலின் முதல்வராவார் என பேசியிருந்தார்.
 
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு எதிர்கட்சி தலைவரை அரசக்குமார் பாராட்டி பேசியது பாஜகவினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அரசக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் மத்திய தலைமைக்கு புகார் அளித்துள்ளனர். 
இந்நிலையில் மாநில பாஜக பொதுச்செயலாளர் நரேந்திரன், ஸ்டாலின் முதல்வராவார் எனக் கூறியது கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயல். எனவே பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை கோரி தலைமைக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 
 
அதோடு  தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை பி.டி.அரசகுமார் கட்சி சார்பில் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடாது. கட்சி கூட்டங்கள், ஊடக விவாதங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். 
 
ஆனால், என் தனிப்பட்ட கருத்துகளைதான் நான் கூறினேன். ஸ்டாலினை சாதரணமாகதான் வாழ்த்தினேன். எனினும் இதுகுறித்து தலைமை என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்க தயார் என்று அரசக்குமார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.