செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (15:04 IST)

”அவர் மட்டுமா? நான் கூடத்தான் முதல்வராக ஆசைப்படுகிறேன்.. ஆனால்??”.. ஓ.எஸ்.மணியன் பதில்

முக ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என பாஜகவின் அரசகுமார் ஆசைப்படுகிறார் என கேட்டமைக்கு “நானும் தான் முதல்வராக ஆசைப்படுகிறேன்” என கூறியுள்ளார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு சென்ற பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் எம்.ஜி.ஆர்.க்கு பிறகு தான் ரசித்த ஒரே தலைவர் ஸ்டாலின் தான் எனவும், அவர் ஒரு நாள் முதல்வராக ஆவார் எனவும் கூறினார். இது பாஜகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் கைத்தறி மற்றும் ஜவுளி அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அப்போது, ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என பாஜகவின் அரசகுமார் கேட்டுள்ளார்  குறித்து நிரூபர்கள் கேட்டபோது, “நான் கூடத்தான் முதல்வராக ஆசைப்படுகிறேன்; ஆனால் அது நடக்கவேண்டுமே” என கூறியுள்ளார்.

அதே பேட்டியில் உத்தவ் தாக்கரேவுக்கு மாலை அணிவித்த ஸ்டாலின் மதச்சார்பற்ற கட்சி தலைவரா? என கேள்வி எழுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.