வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2022 (15:50 IST)

பறவைக்காய்ச்சல் எதிரொலி: தமிழகம்- கேரள எல்லையில் வாகன சோதனை!

Bird Flu
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கேரளத்திலிருந்து தமிழகம் வரும் வாகனங்கள்  சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயின் விஜயன் தலைமையிலான இடதுசரி முன்னனி ஜனநாயக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஆலப்புழா, கோட்டயம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக கோழிகள், வாத்துகள் போன்ற பறவைகள் திடீரென்று உயரிழந்ததை அடுத்து, அவைகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவைகளுக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதியாகியுள்ளதால், அங்கிருந்து அண்டை மாநிலமான தமிழகத்திற்கு வரும் வாகனங்களில் இறந்துபோன பறவைகள் கொண்டுவரப்படுகிறதா என்று  சோதனை செய்ய கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் கால் நடைப்பராமரிப்புத்துறையினயினர் முகாம் அமைத்தும்   சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் கேரள மா நிலத்தில் இருந்து கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட பறவைகள் அவற்றின் முட்டைகள் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Edited by Sinoj