சசிகலாவை நான் வரவேற்கவில்லை… மறுப்பு போஸ்டர் ஒட்டிய நிர்வாகி!

Last Updated: ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (11:24 IST)

அதிமுகவைச் சேர்ந்த வேல்முருகன் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியதால் அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் சற்று முன் அவர் சென்னைக்கு வருவதற்காகக் பெங்களூரில் இருந்து கிளம்பினார். அவரது வரவால் அதிமுகவில் சில சலசலப்புகள் எழுந்தன. அதிமுகவில் பொறுப்பில் இருக்கும் சிலரே அவருக்கு போஸ்டர்களும் அடித்து ஒட்டினர்.

அப்படி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பொறுப்பாளர் வேல்முருகன் என்பவர் ‘அதில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும். அதிமுகவை வழிநடத்த வரும் பொதுச்செயலாளர் சின்னம்மா’ எனப் போஸ்டர் ஒட்டியதை அடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இப்போது அவர் இப்போது என் பெயரில் வேறு யாரோ போஸ்டர் ஒட்டியுள்ளார்கள் எனக் கூறி அதற்கு மறுப்பு போஸ்டர் ஒட்டியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :