திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2017 (17:24 IST)

ஆர்.கே. நகரில் கூட்டணி இல்லாமல் களமிறங்கும் பாஜக

டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. திமுகவுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேதிமுக, மாதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை. 
 
டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட போவதாக தெரிவித்தார். இந்நிலையில் பாஜக யாருடனும் கூட்டணி இல்லாமல் போட்டியிட போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுக மற்றும் பாஜக சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. திமுக சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.