செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 17 ஜனவரி 2018 (12:00 IST)

நடிகர் கமல்ஹாசன் மீது கேள்வி எழுப்பிய தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக அரசியல் குறித்தும், அரசியல் தலைவர்கள் குறித்தும் தொடர் விமர்சனங்களை செய்து வரும் நடிகர் கமல்ஹாசன் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி முதல் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும், அன்றைய தினம் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் தொடங்கும் இந்த அரசியல் பயணம், மதுரை, திண்டுக்கல், மற்றும் சிவகங்கை மாவட்டத்திலும் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் கமலின் அரசியல் அறிவிப்பிற்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். மேலும் கமல் தன்னுடைய கட்சி அறிவிப்பை நள்ளிரவில் வெளியிட்டு இருக்கிறார். ஏன் இரவில் கட்சி குறித்து அறிவித்தார் என்று தெரியவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் மக்களுக்கு அவர் எப்படி குரல் கொடுப்பார், சினிமாவில் இருந்துவிட்டு அரசியலுக்கு வருவது சரிப்பட்டு வருமா போன்றவற்றை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.