வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By sinoj
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (00:53 IST)

முடி உதிர்வைத் தடுக்கும் வழிமுறைகள்

முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல்.
 
* முடி உதிர்வதை தடுக்க அதிகம் அயன், வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.
 
* இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.
 
* எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.
 
* கறிவேப்பிள்ளை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.
 
* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
 
* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
 
* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.