வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (22:59 IST)

பி படித்தவர்களுக்கும் ஆசிரியர்கள் வேலையா? எதிர்ப்பு தெரிவிக்கும் பி.எட் மாணவர்கள்

தமிழக அரசு இன்று பிறப்பித்த உத்தரவு ஒன்றில் பொறியியல் படித்தவர்கள் டெட் தேர்வு எழுதி ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணித ஆசிரியராக உருவாகலாம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வேலை கிடைக்காமல் தவிக்கும் பல லட்சக்கணக்கான பி.இ. படித்தவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 
 
இந்த நிலையில் பி.எட்., படித்தவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பட்டப்படிப்பு முடித்து பிஎட் படிப்பை முடித்து ஆசிரியர் வேலைக்கு எதிர்பார்த்து காத்திருக்கும் தங்களின் வேலைவாய்ப்புகளை பி.இ. படித்தவர்கள் டெட் தேர்வுகளை மிக எளிதாக பறித்து கொள்வார்கள் என்று இவர்கள் தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளியாகி உள்ளது
 
கலை அறிவியல் கல்லூரியில் படித்தவர்கள் பொறியாளர்கள் பார்க்கும் வேலைக்கு அனுமதிக்கப் படுவார்களா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். இவர்கள் தற்போது பெரும்பாலும் வங்கிகளில் பி.இ. படித்தவர்கள்தான் வேலையில் இருக்கின்றனர். ஏற்கனவே பி.காம் படித்தவர்களின் வங்கி வேலைவாய்ப்புகளை பறித்து கொண்ட பி.இ. படித்தவர்கள் தற்போது ஆசிரியர் பணிகளையும் பகிர்ந்து கொண்டால் தாங்கள் எங்கே போவது? என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்