1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (21:23 IST)

ஸ்ரேயாவை சுற்றிவளைத்த லண்டன் போலீசார்: படப்பிடிப்பின் போது திடீர் பதட்டம்

நடிகை ஸ்ரேயா, நடிகர் விமலுடன் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் ’சண்டக்காரி’ இந்த படத்தில் விமல் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்து வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற போது லண்டன் விமான நிலையத்தில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அதற்காக விமான நிலைய அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் லண்டன் விமான நிலையத்தில் பாதுகாப்பு மிகுந்த ஒரு பகுதியில் தெரியாமல் ஸ்ரேயா சென்றுவிட்டார். இதனையடுத்து அந்தப் பகுதியில் காவலுக்கு நின்றிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் ஸ்ரேயாவை சுற்றி வளைத்து அவரிடம் விசாரணை செய்தனர். 
 
படப்பிடிப்பு குழுவினரும் பொதுமக்களும் இந்த பகுதிக்கு வரக்கூடாது என்பது விதியாக இருக்கும் போது நீங்கள் எப்படி இந்த பகுதிக்கு பகுதி வரலாம் என அவரை கேள்விகளால் துளைத்து எடுத்து விசாரணை செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை ஸ்ரேயா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பதற்றத்தில் இருந்தார்
 
அப்போது அங்கே வந்த படக்குழுவினர் தாங்கள் படப்பிடிப்புக்காக பெற்றுள்ளதாகவும், மேலும் ஸ்ரேயா படப்பிடிப்பு குழுவினர்களில் ஒருவர் தான் என்றும் அவர் தெரியாமல் பாதுகாப்பு பகுதிக்கே வந்து விட்டதாகவும் கூறி விளக்கம் அளித்தனர். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அதன் பின்னர் படக்குழுவினர்களையும் ஸ்ரேயாவையும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனால் படப்பிடிப்பு சில மணிநேரம் தாமதமானது மட்டுமின்றி படக்குழுவினர்களிடையே பதட்டமும் ஏற்பட்டது