வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 மே 2023 (17:01 IST)

பி.இ., பி.டெக்., முதலாமாண்டு சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

college students
பொறியியல் கல்லூரி படிப்புகளான பி.இ., பி.டெக்., ஆகிய படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிடெக், பிஆர்க், பி.டெக்.,  பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் அதன் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2023 24 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் செயற்கை பெற விண்ணப்ப படிவம் நாளை முதல் வழங்கப்படுகிறது. 
 
https://www.tneaonline.org    https://www.tndte.gov.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran