1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Bay of Bengal had heavy cyclone

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை! – தமிழகத்தில் அதீத கனமழை!

Tamilnadu
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அதீத கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்து வந்த நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த நிலையாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தெற்கு கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளிலும் தமிழகத்தில் மலைத்தொடர்களை ஒட்டிய பகுதிகளிலும் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
தேசிய கல்விக்கொள்கையை தமிழில் மொழிபெயர்த்த தன்னார்வலர்கள் – லிங்க் உள்ளே!