வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (17:51 IST)

மதிய உணவில் வாழைப்பழம்....அமைச்சர் அன்பின் மகேஷ் தகவல்

தமிழகத்தில் கொரொனா இரண்டாம்  அலைப்பரவல் காரணமாக  பள்ளிகள் மூடப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சியின் வாழியாகவும் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.  

இந்நிலையில்,  இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை ஆய்வு செய்து வருகிறேன்.  இதுகுறித்த அறிக்கையை வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளேன். இந்த ஆய்வறிக்கையில்  வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கு வகையில்  மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது, ஆதிதிராவிடப் பள்ளிகளில் மாணவர்களின் மாணவர்களின் சேர்க்கையை  உயர்த்துவது இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,   பள்ளிகளில் உள்ள குடிநீர் குழாயிலிருந்து , மாணவர்கள் தண்ணீர் சுமந்து வருவதைத் தவிர்த்தல்  இதற்காகப் பணியாளர்களை நியமிக்கவும் இந்த ஆய்வறிக்கையில் இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.