1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 மார்ச் 2021 (16:57 IST)

10 சதவீத இட ஒதுக்கீடு சட்டவிரோதமானது… மாநில அரசின் முடிவு குறித்து மத்திய அரசு!

புதுச்சேரியில் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் 10 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பாக வழக்கு ஒன்று நடைபெற்றது.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி நுழைவு தேர்வுகளில் 7.5 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை புதுச்சேரியிலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதை எதிர்த்து மாணவி திவ்யதர்ஷினி என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கு விசாரணையில் பதிலளித்த மத்திய அரசு  ‘ஒரே நாடு ஒரே தகுதி என்ற அடிப்படையில் நீட்தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் புதுவை அரசு அளிக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டவிரோதமாகும். ’ எனக் கூறியுள்ளது.