1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 5 ஜூலை 2018 (19:20 IST)

செயல்படாத தலைவர் சென்னையில் உள்ளார்: ஸ்டாலினை சீண்டும் அழகிரி!

தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி திருமங்கலம் தேர்தலின் மூலம் புது ட்ரெண்டை உருவாக்கினார். அதன் பின்னர் கட்சிக்குள் நடந்த சில நெருக்கடி காரணமாக கட்சியை விட்டு விலகியுள்ளார். 

 
ஆனால், அவ்வப்போது கருணாநிதியை சந்திப்பது, சில சமயங்களில் திமுக குறித்த தன்னுடைய கருத்துக்களை வெளியிடுவது போன்ற செயல்களிலும் ஈடுப்பட்டு வருகிறார். 
 
இந்நிலையில், அவர் தனது ஆதரவாளர் ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்றார். அங்கு அவர் பின்வருமாறு பேசினார். நான் இங்கு வருவதற்காக வரவேற்பு, பேனர்கள், மாலை மரியாதைகள் இவை அனைத்தையும் பார்க்கும் போது பழைய நினைவெல்லாம் வருகிறது. 
 
இப்போது திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காகவே உள்ளனர். அவர்கள் கட்சிக்காக உழைக்காதவர்கள். ஆனால் திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர். செயல்படாத தலைவர் சென்னையில் உள்ளார். செயல்படுகிற வீரர்கள் இங்குதான் உள்ளனர் என கூறினார். 
 
இதர்கு முன்னர் தமிழக முதலமைச்சர் ஒரு திருமண விழாவில் செயல்படாத தலைவருக்கு ஏன் செயல் தலைவர் என பெயர் என இதே போல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.