வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (07:40 IST)

ஸ்டாலின் எனது தலைமையை தட்டி பறித்துவிட்டார்: உதயநிதி புகார்

ஸ்டாலின் எனது தலைமையை தட்டி பறித்துவிட்டார்: உதயநிதி புகார்
தனது தலைமையை ஸ்டாலின் தட்டி பறித்துவிட்டதாக அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் திருமண விழா ஒன்றில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று தஞ்சையில் திமுக பிரமுகர் அன்பில் தர்மலிங்கம் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஸ்டாலின், உதயநிதி, டி.ஆர்.பாலு உள்பட பல திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 
 
இந்த விழாவில் பேசிய உதயநிதி, 'இந்த திருமண விழா எனது தலைமையில் நடைபெறுவதாகத்தான் இருந்தது. ஆனால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடைசி நேரத்தில் எனது தலைமையை தட்டி பறித்து விட்டார் என்று கூறினார். 
 
ஸ்டாலின் எனது தலைமையை தட்டி பறித்துவிட்டார்: உதயநிதி புகார்
முன்னதாக ஸ்டாலின் வெளிநாடு செல்லும் திட்டம் இருந்ததால் அவருக்கு பதிலாக உதயநிதி தலைமையில் இந்த திருமண விழா நடப்பதாக இருந்தது. ஆனால் ஸ்டாலின் வெளிநாடு திட்டம் ரத்தானதை தொடர்ந்து அவரே இந்த விழாவிற்கு தலைமை தாங்கினர். இதனை குறிப்பிட்டே உதயநிதி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியபோது, 'திமுகவினர்களின் குடும்ப விழாவில் என்னுடைய தலைமைப் பொறுப்பை யாராளும் தட்டிப்பறிக்க முடியாது’ என்றும் உரிய  நேரம் வரும்போது உதயநிதிக்கு வாய்ப்பும், பதவியும் தானாகவே வந்து சேரும் என்றும் கூறினார்.