புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 மே 2022 (16:02 IST)

ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்படுகிறதா?

ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கையை ஏற்று வரும் வெள்ளியன்று ஆட்டோ கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும் என தகவல்.  

 
சென்னையில் கடந்த 34 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். இந்நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.94எனவும் விற்பனையாகி வருகிறது.

தொடர்ச்சியாக 35 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்றாலும் ஏற்கனவே பெட்ரோல் விலை 110 ரூபாயையும் டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி உள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் விரைவில் புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்ய போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்ய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கையை ஏற்று வரும் வெள்ளியன்று ஆட்டோ கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.