இரண்டாவது கல்யாணம் செய்த கணவன் – கையும் தாலியுமாக பிடித்த முதல் மனைவி
முதல் மனைவியை முரைப்படி விவாகரத்து செய்யாமலே இரண்டாவது மனம் செய்துகொண்ட கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அரியலூரில் உள்ள மதனத்தூரை சேர்ந்தவர் சுபாஷ். வயது அதிகமாகியும் திருமணமாகாமல் இருந்தார் சுபாஷ். சில வருடங்களுக்கு முன்பு மகாராஷ்டிரத்தில் உள்ள இவரது உறவினர் பெண்ணான ஸ்டெல்லா என்பவருடன் சுபாஷுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் சுபாஷுக்கும், ஸ்டெல்லாவுக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சண்டை முற்றிய நிலையில் ஸ்டெல்லா தன் குழந்தைகளை அழைத்து கொண்டு தனது அம்மா வீட்டுக்கு போய்விட்டார்.
அதற்கு பிறகு தனிமையில் இருந்த சுபாஷுக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆசை வந்திருக்கிறது. உடனே மதுரையை சேர்ந்த பெண் ஒருவரை பார்த்து முடிவு செய்துள்ளார். இருவருக்கும் திருமணம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலையில் நடந்துள்ளது. மணப்பெண்ணுடன் கோவிலை சுற்றி வந்திருக்கிறார் சுபாஷ். அதே கோவிலுக்கு தன் குழந்தைகளை அழைத்து கொண்டு சுற்றி பார்க்க வந்திருக்கிறார் ஸ்டெல்லா. திருமண கோலத்தில் சுபாஷ் எதிரே வருவதை கண்ட ஸ்டெல்லா அதிர்ச்சியடைந்தார். முதல் மனைவியை கண்ட மாத்திரத்தில் சுபாஷும் பயந்து நடுங்கி நின்றார்.
உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்து சுபாஷை கைது செய்து சிறையிலடைக்க செய்தார் முதல் மனைவி ஸ்டெல்லா. இந்த சம்பவம் கொஞ்ச நேரத்தில் சுவாமிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.