ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 23 ஜூன் 2021 (08:52 IST)

எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் வழக்குகள் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்: டெல்லியில் ஒருவர் கைது!

எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் வழக்குகள் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
சென்னையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் தொடர் கொலைகள் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொள்ளை சம்பவம் வழக்குகள் அனைத்தும் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுவரை இந்த கொள்ளை குறித்து 16 புகார்கள் வந்துள்ளதாகவும் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்த நிலையில் அந்த வழக்குகள் அனைத்தையும் மாற்றி குற்றப் பிரிவுக்கு மாற்றி மாற்றி உள்ளனர் 
 
மேலும் கொலை தொடர்பாக வடமாநிலங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டு கொள்ளையர்களை தேடி வரும் நிலையில் கொள்ளை கும்பல் தலைவன் ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த கொள்ளையனிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மேலும் இந்த கொள்ளையில் மூவர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை பிடிக்கும் பணிகளில் தனிப்படை போலீசார் தீவிரமாக இருப்பதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது