வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2024 (08:40 IST)

உங்களுக்கு தான் நிச்சயம் வெற்றி.. ஜோதிடர் அருள் வாக்கால் உற்சாகத்தில் கோவை பிரமுகர்..!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கோவையில் பிரபலம் ஒருவர் போட்டியிடும் நிலையில் அவருக்கு தான் வெற்றி நிச்சயம் என்று அவரது ஆஸ்தான ஜோதிடர் அருள் வாக்கு கூறியுள்ளதாகவும் இதையடுத்து அவர் உற்சாகமாக பிரச்சாரம் செய்து வருவதாகவும் தகவல் வெளியானது.

கோவை தொகுதியில் போட்டியிடும் பிரமுகர் கடந்த சில நாட்களாக வந்த உளவுத்துறை ரிப்போர்ட் காரணமாக சோர்வாக இருந்ததாகவும் உளவுத்துறை ரிப்போர்ட்டில் வெற்றி கிடைப்பது கடினம் தான் என்று கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் அவரது ஆஸ்தான ஜோதிடர் குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கிறது எனவே நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் எனவே சோர்வடையாமல் பிரச்சாரம் செய்யுங்கள் என்று கூற இதனை அடுத்து அவர் உற்சாகத்துடன் தற்போது பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

திராவிட கட்சிகளுக்கு இணையாக தனக்கு வாக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை உடன் இருக்கும் அந்த பிரமுகர் கண்டிப்பாக ஜெயிப்பார் என்று அவரது கட்சியினரும் கூறி வருகின்றனர்.

மேலும் இந்த தொகுதியில் ஜெயித்தால் அவர் தான் மத்திய அமைச்சர் என்ற பிரச்சாரம் கோவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


Edited by Siva