திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (15:02 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்படவில்லை என்று  அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர் என்பதை தெரிந்ததே. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை ஆஜராகுமாறு நான்கு முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. 
 
இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அமலாக்கத்துறை நான்கு முறை அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது என்றும் ஆனால் அவர் ஆஜராகவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாரை கைது செய்யவில்லை என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva