செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (15:14 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது.. அமலாக்கத்துறை அதிரடி;

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அவர்கள் ஆஜராக அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியவர் ஆஜராகாத நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்தனர் என்பதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கொச்சியில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் ஆஜராக பலமுறை சமன் அனுப்பியும் அவர்  ஆஜராகாமல் இருந்த நிலையில் அவர் கொச்சியில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சியில் சென்று செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாரை  கைது செய்துள்ளனர். 
 
தற்போது அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva