1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 7 டிசம்பர் 2018 (15:55 IST)

பெங்களூர் விரையும் அறுமுகசாமி ஆணையம்? சசிகலாவிற்கு செக்

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறப்பட்டு இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம்  தொடர்பாக பலரை விசாரித்து வருகிறது. 
 
இந்த விசாரணையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிலிருந்து, பாதுகாப்பு அதிகாரிகளிலிருந்து ஒருவரையும் விடுவதாக இல்லை. தற்போது இந்த விசாரணை சசிகலா பக்கம் திரும்பியுள்ளது. 
 
ஏற்கனவே இதற்கு முன்னர் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட இருந்த போது அவரால் நேரில் வர முடியாததால் பிரமாண பத்திரம்தான் தாக்கல் செய்திருந்தார். மேலும், வீடியோ கான்பரஸ் மூலம் விசாரணை நடத்தலாம் என்ற போது சிறையில் அந்த வசதி இல்லாததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. 
இந்த விசாரணையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ள ஆறுமுகசாமியின் ஆணையம் சசிகலாவிடம் விசாரிப்பதில் உறுதியாய் இருந்தனர். ஆனால், பரோல் அளிக்கப்பட்டு சசிகலா சென்னை வரவழைக்கப்படுவாரா? அல்லது அதிகாரிகளே சிறைக்கு போய் விசாரணையை நடத்துவார்களா என்பதில் குழப்பம் இருந்து வந்தது.
 
இந்நிலையில், சிறைக்கு சென்று விராணை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறைச்சாலையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரி கடிதம் எழுத்தப்பட்டுள்ளது. 
 
விசாரணைக்கு அனுமதி கிடைத்ததும் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு பின்னர் உள்ள உண்மைகள் தெரிய வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.