1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 5 டிசம்பர் 2018 (11:42 IST)

ஜெயலலிதா நினைவிடத்தில் மீண்டும் கண்கலங்கிய பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவின் 2ஆம் நினைவு தினத்தையொட்டி  அதிமுகவினர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று, பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார்.
 
இன்று அவரது இன்று இரண்டாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அவரது நினைவிடத்தில் பூக்கள் அலங்கரிக்கப்பட்டு காலை முதலே பல்வேறு மக்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, உள்ளிட்ட பலர் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், கட்சிப் பிரமுகர்களும், தொண்டர்களும் வாலாஜா சாலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி சென்றனர்.
 
ஜெயலலிதா நினைவிடத்திற்கு அமைச்சர்களுடன் சென்ற முதமலைச்சர், துணை முதலமைச்சர் கைகூப்பி ஜெயலலிதா படத்தை வணங்கி அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அனைவரும் சோகத்துடன் காணப்பட்டனர். துணை முதல்வர் பன்னீர் செல்வ கண்கலங்கினார். அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை வணங்கி அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.