1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Arrested pauldurai dead due to corona

சிபிஐ கொடுக்காத தண்டனையை கொடுத்த கொரோனா: சாத்தான்குளம் பால்துரை மரணம்!

சாத்தான்குளம்
சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ பால்துரை கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. 
 
சாத்தான்குளத்தில் தந்தை - மகனை விசாரணைக்கு அழைத்து சென்று அடித்து துன்புறுத்தி மரணமடைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்த விசாரணையை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உள்பட 10 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் விசாரணை அதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் கைதான சிறப்பு எஸ்.ஐ பால்துரைக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 
 
ஆனால், அவர் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எனவே இதனை இணையவாசிகள் சிபிஐ கொடுக்காத தண்டனையை கொரோனா கொடுத்துவிட்டதாக கூறி வருகின்றனர். 
அடுத்த கட்டுரையில்
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; 100% ஆல் பாஸ்! – கொண்டாடத்தில் மாணவர்கள்!