ரஜினிக்கு நாங்க இருக்கோம்... அர்ஜுன் சம்பத் பேட்டி!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 30 நவம்பர் 2020 (15:16 IST)
ரஜினி கட்சி தொடங்குவது குறித்து நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவதாக அர்ஜுன் சம்பத் பேட்டி. 
 
சமீபத்தில் அவர் ரஜினி குறித்து அளித்த பேட்டி பின்வருமாறு... நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கட்சி தொடங்குவது குறித்து அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று கருதுகிறேன். 
 
தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ரஜினி தொடங்கும் கட்சி, மாற்றத்தை விரும்பும் மக்களுக்கானதாக இருக்கும். ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி முழு ஆதரவை தரும் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :