நாளை நீட் நுழைவுத் தேர்வு; இன்று மாணவி தற்கொலை! – அரியலூரில் அதிர்ச்சி!
நாளை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் (NEET) தேர்வு நடைபெற உள்ள நிலையில் இன்று மாணவி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர NEET நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான நீட் நுழைவு தேர்வு நாளை (ஜூலை 17)ம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நேற்று முன்தினம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
நாளை தேர்வு நடைபெற உள்ள நிலையில் அரியலூரை சேர்ந்த மாணவி நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். அவர் திடீரென இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.