1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. NEET exam hall tickets release date

நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு..? – மாணவர்கள் எதிர்பார்ப்பு!

NEET
மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு பலரும் விண்ணப்பித்துள்ள நிலையில் அதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக உள்ள நிலையில் நடப்பு ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு 17ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் மொத்தம் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து 1,42,286 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வுக்கு இன்னும் ஒருவார காலமே உள்ளதால் இன்று நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் மற்றும் தேர்வு மைய விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹால்டிக்கெட் மற்றும் தேர்வு மைய விவரங்கள் https://neet.nta.nic.in/ என்ற நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
About Writer
Prasanth Karthick