மது போதையில் கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த நபர் காவல் துறையினரிடம் வாக்குவாதம்!
தேனி மாவட்டம், போடி பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் முன்பாக மது போதையில் கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த நபர் டாட்டா ஏசி மற்றும் இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்தனர்.
அப்போது மது மது போதையில் இருந்த நபர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மது போதையில் இருந்த நபர் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் திரும்பி சென்றனர்.
இது குறித்த வீடியோதற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.