1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (10:48 IST)

தேர்தல் நேரத்தில் ரஜினி, கமல் அடித்த பல்டி – பாஜகவின் ஸ்லீப்பர் செல்ஸா ?

ரஜினி கமல் இருவரின் சமீபகால செயல்பாடுகள் யாவும் அவர்கள் பாஜகவின் ஸ்லீப்பர் செல்களோ என்ற அச்சம் எழும் வண்ணம் உள்ளன.

ரஜினி, கமல் இருவருமே அரசியலில் இறங்கப்போவதை உறுதி செய்ததுமே இவர்கள் இருவரும் பாஜகவின் பி டீம் என்றும் ஸ்லீப்பர் செல் என்றும் குரல்கள் எழுந்தன. ஆனால் இருவரும் நடுநிலையாளர்களாக இதுவரை தங்களை வெளிக்காட்டிக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் ரஜினி, கமல் ஆகிய இருவரின் மிகச் சமீபத்தைய செயல்பாடுகள் அவர்கள் இருவரும் பாஜக ஆதரவாளர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. சென்ற வாரம் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்த பின் வெளியிட்ட அறிக்கையில் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை யார் திர்ப்பார்கள் என நம்புவார்களோ அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா முழுவதும் தீவிரவாதத் தாக்குதல், மதச் சகிப்பின்மை, சிறுபாண்மையினர் மீதான தாக்குதல் என அத்தியாயப் பிரச்சனைகள் இருக்கும்போது தண்ணீர் பிர்ச்சனையை முன்னிறுத்துவது, நதிநீர் இணைப்பு விவகாரத்தை முன்னிறுத்தும் பாஜக வுக்கு மறைமுக ஆதரவளிப்பதாக உள்ளது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதேப்போல மாநில அரசுப் பிரச்சனைகளில் தெளிவாக இருக்கும் கமல், மத்திய அரசுப் பிரச்சனைகளைப் பற்றி வாயே திறக்காமலும் அப்படியேக் கருத்துகள் கூறினாலும் மழுப்பலானப் பதில்களையேக் கூறி வருவதும் வாடிக்கையாக இருக்கிறது. அதிமுக அரசின் அடக்குமுறைகளால் நேரடியாகப் பாதிக்கப்படே கமல் அரசியலில் இறங்கினார். ஆனால் இப்போது தேர்தல் நேரத்தில் அதிமுகவைக் காட்டிலும் 7 வருடங்களாக ஆட்சியில் எந்தப் பங்கும் வகிக்காத திமுக வைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் அதிமுக வில் இணைய இருக்கும் பாஜக மீதான எதிர்ப்பலைகள் குறையும் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

அதனால் இதுவரை திமுக மற்றும் சிலப் பெரியாரிய இயக்கங்களால் கூறப்பட்டு ரஜினி, கமல் இருவரும் வந்த பாஜக ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டு இப்போது மக்களாலும் கூறப்படும் சூழல் உருவாகியுள்ளது.