1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 பிப்ரவரி 2019 (16:18 IST)

திமுகவை விமர்சிப்பதால் கமல் அதிமுகவுடன் கூட்டணியா? ஜெயகுமார் சூசகம்!

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். 
 
கூட்டணி குறித்த கேள்வியின் போது கமல் திமுக மற்றும் அதிமுக இரண்டுமே ஊழல் கறைப்படிந்த கட்சிகள். இதனால் இரண்டு கட்சிகளோடும் கூட்டணி இல்லை என தெரிவித்தார். 
 
இதனால் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கமலை கிண்டலடிக்கும் விதமாக கமலை பூம்பூம் மாட்டுக்காரன் என கேலி செய்து கட்டுரை ஒன்றை வெளியிட்டது. 
இதன்பின்னர், அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பேசியக் கமல் ஒருவேளை நான் சட்டமன்றத்திற்கு சென்றால் சட்டையைக் கிழித்துக்கொண்டு வரமாட்டேன். அப்படியே சட்டையை யாராவது கிழித்தாலும் வேறு சட்டையை மாற்றிக்கொண்டே வருவேன் என ஸ்டாலினை கேலி செய்தார். 
 
இதற்கு பதில் அளிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் கமல் அறியாமையின் காரணமாக பேசிவருகிறார் என குறிப்பிட்டிருந்தார். இதனால் திமுக மற்றும் கமல் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. 
இந்நிலையில் கமல் திமுகவை விமர்சனம் செய்து வருவதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்க்கப்பட்டதற்கு, ஸ்டாலின் விளம்பரத்துக்கு வருவது போல் சட்டையைக் கிழித்து வந்ததை கமல்ஹாசன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். 
 
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதிமுகவை பொறுத்தவரை திமுக, டிடிவி தினகரனின் அமமுக கட்சி இரண்டும் எதிரி கட்சிகள் என தெரிவித்துள்ளார்.