புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 18 பிப்ரவரி 2019 (15:37 IST)

விபத்தில் உயிரிழந்த தருமபுரி மாவட்ட செயலாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி: ரஜினி

சாலை விபத்தில் உயிரிழந்த ரஜினி மக்கள் மன்ற  செயலாளர்  குடும்பத்திற்கு  நடிகர் ரஜினிகாந்த் ரூ 50 லட்சம் நிதியுதவி வழங்கினார்.



 
கடந்த ஜனவரி 5ம் தேதி, வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே லட்சுமிபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சாலைத் தடுப்பில் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் தருமபுரி  மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் மகேந்திரன்(52) உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார். இவர் தருமபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளராக இருந்தார்.
 
இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்த ரஜினி மக்கள் மன்ற தர்மபுரி மாவட்ட செயலாளர் மகேந்திரன் குடும்பத்திற்கு மக்கள் மன்றம் சார்பில் ரஜினி காந்த் ரூ 50 லட்சம் நிதியுதவி வழங்கினார்.