’தனி வழியில்’ செல்லும் ரஜினியை சீண்டும் திமுக... ஸ்டாலின் காரணமா..?

rajini
Last Modified திங்கள், 18 பிப்ரவரி 2019 (20:04 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை. சட்டமன்றத் தேர்தல் தான் எங்கள்  இலக்கு  என்று ரஜினி தெரிவித்தார். இது பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ. நடிகர் ரஜினி
காந்தை சீண்டுவது போல பேசியுள்ளார்.
 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜெயக்குமார் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட ஜெ. அன்பழகன் ரஜினியை கடுமையாக விமர்சித்து பேசினார். அதில் தமிழ்நாட்டில் ரஜினியை விட்டால் ஆளில்லை என்பது போல் சினிமா ஓடுவது போன்று அரசிலும் ஒடும் என்று நினைத்து கொண்டிருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பேட்ட படம் வந்த மாதிரி நினைத்து வருகிறார். ஆனால் பேட்ட படம் போன்றே அனைத்து படமும் வெற்றி அடையும் என கூறமுடியாது. லிங்கா படம் தோல்வி அடைந்திருக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.
ambalakan
ஆனால் ரஜினியின் மகள் திருமணத்தில் ஸ்டாலின் நட்பு முகமாய் கல்ந்துகொண்டார். இந்நிலையில் ஸ்டாலின் தான் ரஜினியை விமர்சிக்க அனுமதி அளித்தாரா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :