செவ்வாய், 8 ஜூலை 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 5 ஜூன் 2025 (14:07 IST)

காந்தம் ஏற்றுமதியை நிறுத்தும் சீனா.. இந்திய கார் உற்பத்தி வாகன நிறுவனங்கள் அதிர்ச்சி..!

US China Trade war
இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், சீனா திடீரென மின்சார கார் உற்பத்திக்கு தேவையான காந்தங்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.
 
மின்கார் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றும் அரிய உலோகமான காந்தங்கள் பெரும்பாலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியா இந்த உலோகங்களில் 90% அளவை சீனாவிலிருந்து பெறுகிறது.
 
திடீரென சீனா இந்த காந்தங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது டாடா, மஹிந்திரா, மாருதி சுசுகி போன்ற நிறுவனங்களின் உற்பத்தி செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
 
சீனாவின் இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள், அமெரிக்காவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையாக கூறப்படுகிறது. ஆனால் அதன் தாக்கம் இந்தியாவின் கார் உற்பத்தி வளர்ச்சிக்கே இடையூறாக உள்ளது.
 
பிற நாடுகளிலிருந்து காந்தங்களை பெற முயற்சி செய்தாலும், அதன் செலவு அதிகமாகும். இதனால் உற்பத்தி மொத்த செலவிலும் உயர்வை ஏற்படுத்தும்.
 
தற்போது சீனாவுடன் இந்திய உறவுகள் சீராக இல்லாததால், பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகளும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனால், இந்திய வாகனத் துறை நிறுவனங்கள் பரபரப்பான சூழ்நிலையில் உள்ளன.
 
Edited by Siva