வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 அக்டோபர் 2023 (15:57 IST)

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? – புகார் எண்கள் அறிவிப்பு!

தீபாவளிக்காக மக்கள் பயணத்திற்கு தயாராகி வரும் நிலையில் ஆம்னி பேருந்துகளில் அதிகம் பணம் கட்டணம் விதித்தால் புகார் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.



நவம்பர் 12ம் தேதி தீபாவளி கொண்டாட உள்ள நிலையில் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் பேருந்து, ரயில்கள் முழுவதும் முன்பதிவால் நிரம்பியுள்ளன. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளையும் அறிவித்துள்ளது.

மேலும் மக்கள் பலரும் தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்லவும் புக்கிங் செய்து வருகின்றனர். இதனால் ஆம்னி பேருந்தில் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் ஆம்னி பேருந்து கட்டணம் குறித்த புகார்களுக்கு இலவச சேவை எண் அளிக்கப்பட்டுள்ளதூ.

அதன்படி, 1800-4256-151 என்ற இலவச சேவை எண்ணில் அழைத்து புகார்களை தெரிவிக்கலாம். மேலும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்த புகார்களுக்கு 9445014450 மற்றும் 9445014436 என்ற எண்ணிலும் அழைக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K