1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (20:52 IST)

கமலுக்கு வாக்கு சேகரித்த கெஜ்ரிவால்

மதுரையில் நடைபெற்று வரும் கமல் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தற்போது மக்கள் முன்னிலையில் பேசினார்.


 
இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன், மதுரையில் நடைபெற்று வரும் கட்சி பொதுக்கூட்டத்தில் கட்சியின் கொடியை ஏற்றி மக்கள் முன் மேடையில் கட்சியின் பெயரையும் அறிவித்தார். மக்கள் நீதி மய்யம் என்று கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த சோம்நாத் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
பொதுக்கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
 
நான் கமல்ஹாசனின் ரசிகன். அவர் நிஜ வாழ்க்கையில் ஹீரோ. ஊழல் வேண்டுமென்றால் திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களியுங்கள். உங்களுக்கு அடிப்படை வசதி வேண்டுமென்றால் கமலுக்கு வாக்களியுங்கள். 4 ஆண்டுகளுக்கு முன் சிறு கட்சியாக தொடங்கிய நான் டெல்லியில் ஆட்சியை பிடித்துவிட்டேன். டெல்லி மக்களை போன்று தமிழக மக்களுக்கும் கமலுக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். தமிழகத்தில் நேர்மையான அரசியல் கட்சி உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.