1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2018 (19:36 IST)

மக்கள் நீதி மய்யம்; கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்ஹாசன்

பொதுக்கூட்டத்திற்கு வந்த கமல்ஹாசன் கட்சியின் கோடியை ஏற்றிவிட்டு மேடை ஏறிய கமல்ஹாசன் கட்சியின் பெயரை அறிவித்தார்.

 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை இன்று அப்துல்கலாம் வீட்டிலிருந்து துவங்கினார். தற்போது மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசி வருகிறார்.
 
வெகு நாட்களாக எல்லோராலும் பெரிதும் எதிர்பார்த்த கட்சி கொடி மற்றும் பெயர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு வந்த கமல்ஹாசன் கட்சியை கொடியை ஏற்றிவைத்த பின் மேடை ஏறினார். மேடையில் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். அதைத்தொடர்ந்து தற்போது பேசி வருகிறார்.