1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2018 (19:03 IST)

கமல்ஹாசனின் அரசியல் கார்ப்பரேட் அரசியலா?

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை இன்று அப்துல்கலாம் வீட்டிலிருந்து துவங்கினார். இராமேஸ்வரத்தில் மக்களிடையே உரையாற்றினார். அதைத்தொடர்ந்து தனது சொந்த மண் பரமக்குடிக்கு சென்று அங்கு மக்களிடையே உரையாற்றினார். 
அடுத்து, மதுரையில் தனது கட்சி பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்து தனது அரசியல் கொள்கைகளையும் வெளியிடவுள்ளார். இதற்காக மதுரை ஒத்தக்கடையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
 
கமலின் கட்சிப் பெயர், கொள்கைகள் என்ன? இது எதுவும் தெரியாமல் இவரது அரசியல் பயணம் தமிழக அரசியல் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இடதுசாரி கட்சிகள் மட்டுமே இவரது அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 
 
கமல் தனது படங்களில் இடதுசாரி சித்தாந்தங்களை பேசி வருகிறார். அரசியலுக்குள் நுழையும் பலர் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்குள் அடங்குவது வாடிக்கையானதுதான். 
 
இந்நிலையில், கமலின் அரசியல் பிரவேச துவக்கமே கார்ப்பரேட் நிர்வாக நடைமுறையில் பயணப்படுகிறது. எனவே, கமல் தனது அரசியல் அறிவிப்புகளுக்கு பின்னர் கார்ப்பரேட் நிர்வாகிகளை கைக்குள் வைத்துக்கொண்டு செயல்படுவாரா என்பது போக போகதான் தெரியும்.