வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (18:47 IST)

இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற உள்ள கமல்ஹாசன்

இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் இன்னும் சற்று நேரத்தில் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை இன்று அப்துல்கலாம் வீட்டிலிருந்து துவங்கினார். இராமேஸ்வரத்தில் மக்களிடையே உரையாற்றினார். அதைத்தொடர்ந்து தனது சொந்த மண் பரமக்குடிக்கு சென்று அங்கு மக்களிடையே உரையாற்றினார். தற்போது இன்னும் சில மணி நேரங்களில் மதுரை ஒத்தக்கடையில் உள்ள நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
 
இங்கு தனது கட்சியை கொடியை ஏற்றி வைக்கிறார். தனது கட்சியின் கொள்கை குறித்து விளக்க உள்ளார். எல்லோருக்கும் புரியும் படி தனது கொள்கையை விளக்குவேன் என்று கூறியுள்ளார். ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் அவரது ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கூட்டத்தை சிரமம் இல்லாமல் பார்க்க 16 அடி உயரமும், 60 அடி நீளமும் கொண்ட எல்.இ.டி திரை வைத்துள்ளனர். தங்கியிருக்கும் விடுதியில் இருந்துய் கமல்ஹாசன் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டார்.