வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (19:26 IST)

கமல்ஹாசன் கட்சி பொதுக்கூட்டத்தில் சினேகன்!

மதுரை நடைபெற்று கொண்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் தற்போது பிக்பாஸ் புகழ் சினேகன் பேசு வருகிறார்.

 
நடிகர் கமல்ஹாசன் அறிவித்தப்படி இன்று தனது அரசியல் பயணத்தை இராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கினார். தற்போது மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசி வருகிறார்.
 
இந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் பங்கேற்றுள்ளார். பொதுக்கூட்டத்தில் மக்கள் முன் ஒவ்வொருவராக பேசி வருகின்றனர். பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற கவிஞன் சினேகன் தற்போது பேசி வருகிறார்.
 
கமல்ஹாசனை புகழ்ந்து பேசி கொண்டிருக்கிறார். நல்ல தலைமை கிடைத்துள்ளது. ஒரு நூலகம், பலகலைக்கழகம் நமக்கு தலைமையாக கிடைத்துள்ளது என்று பல்வேறு விதமாக கமல்ஹாசனை புகழ்ந்து பேசி வருகிறார்.