திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (10:06 IST)

அரக்கோணத்தில் இரண்டு இளைஞர்கள் அடித்துக் கொலை! – இதுவரை 5 பேர் கைது!

அரக்கோணத்தில் இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் கட்சி தொடர்பான வாக்குவாதம் ஒன்றின் பேரில் அரக்கோணத்தை சேர்ந்த அர்ஜுன் மற்றும் சூர்யா என்ற இளைஞர்களை குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த காவல்துறை இதுவரை 5 பேரை கைது செய்துள்ளது.