1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Trinomol congress party mp interview

எனது தலைமுடியைக் கூட யாராலும் தொட முடியாது: திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி ஆவேசம்..!

திரிணாமுல் காங்கிரஸ்
என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்பும் நபர்களால் என்னுடைய தலைமுடியை கூட தொட முடியாது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் எம்பி மஹுவா மொய்த்ரா பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது புகார் அளித்துள்ள நிலையில் இது குறித்து அவர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

என் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்பும் நபர்களால் எனது தலை முடியை கூட தொட முடியாது என்று தெரிவித்தார். மேலும் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் என்பவரிடமிருந்து பரிசு பொருளை லஞ்சமாக பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அவர் காட்டமாக இவ்வாறு பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அடுக்கு மாடி குடியிருப்பில் இன்று மின்சார கட்டண குறைவு.. எவ்வளவு குறையும்?